Tuesday, 5 March 2013

தமிழ் இனத்திற்கு செய்த துரோகம்




உலகின் மௌனத்தை , மனசாட்சியை உலுக்கும் கெல்லம் மெக்ரே ....

தமிழினமும் தமிழக காட்சி ஊடகங்களும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடக்கும் போது மனித உரிமைக்காக போராடும் மனிதர் !

தமிழகத்தை சார்ந்த ஒருவர் இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யம் உருவாக்கியிருக்கிறார் பெருமை பட்டுக்கொள்ளலாம்.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது பொழியும் குண்டு மழை காட்சிகளை இவரது செய்தியில் ஒளிப்பரப்புகிறது.

இலங்கை ஈழத்தின் மீது தொடுத்த இனப்படுகொலை போர்க்காட்சிகளை மறைத்தது.

கலாநிதி மாறனின் சன் டிவி தனது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரிரா ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது என்பது தமிழக மக்களுக்கு துரோகம் இழைப்பதாகும்.


"போர் இல்லாத பகுதி" ஆவணப்படத்தை மற்றும் பல போர் காணொளிகளை சன் தொலைக்காட்சி "குழுமம்" முழுவதும் ஒளிபரப்ப தயாரா?

ஒளிபரப்பினால் தென் இந்தியா முழுவதும் ஒரு மணி நேரத்தில் அக்கொடுமை மக்களை சென்றடையும் இதன் மூலம் முதலில் தென்னிந்திய மக்களின் ஆதரவை தமிழர்களின்பால் திருப்பமுடியும்...

இன்றுவரை மாற்று இன மக்கள் கேட்பது இவ்வளவு கொடூரம் நடந்துள்ளதா? என்று...ஏன் தமிழ்நாட்டிலே இணைய பரிச்சயம் உள்ளவர்களை தவிர்த்து (இதிலும் உணர்வுள்ளவர்களை தவிர) எத்துனை பேருக்கு தெரியும் அக்கொடுமைகள் முழுவதுமாக...

ஒரு பாலஸ்தீனிய பெண் இணையத்தில் என்னிடம் "இலங்கையில் நடந்த கொடூரங்களை ஏன் தொலைக்காட்சிகள் காட்டவில்லை" என்று கேட்டார். அந்த புகைப்படங்களை பார்த்த அவர் "பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் கொடூரமாக உள்ளதாக தெரிவித்தார்".

இன்று ஏதோ இப்போதுதான் சண் முழுமத்திற்கு அக்கறை வந்ததுபோல் இலங்கை விடயத்தை விவாதிக்கிறார்கள்...ஒளிபரப்புகிறார்கள்...அட டா...கலாநிதியே, கருணாநிதி அவர்களே, அன்று நடந்தது உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா?...நிறுத்திகொள்ளுங்கள் நாடகத்தை போதும்...அவ்வளவுதான் சொல்லமுடியும்?...

No comments:

Post a Comment